Breaking News

நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று இறுதி தீர்மானம்


பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், இன்று (09) முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில், சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டம், இன்று (09) காலை 10 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படும்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 குழுக்களில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எப்போது விவாதத்துக்கு எடுப்பீர்கள். அதற்கான திகதியை அறிவிக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த 6 ஆம் திகதியன்று கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அவையில் சபைக்கு வந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மேற்படி விவகாரம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எட்டப்படுமெனக் கூறிவிட்டு, சபையை எதிர்வரும் 17ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments