அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாட்டாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது - அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த கு. திலீபன் எம்.பி
அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாட்டாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் விமர்சித்திருந்தார்.
இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 80 பேருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தங்களுடைய மாவட்டத்தில் இருக்கின்ற ஒருவர் என்ற வகையில் எதனையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர்ன் அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்றபோது கூட நான் குருமண்காட்டில் உள்ள வாடகை வீட்டிலேயே இருந்தேன். இவ்வாறான நிலையில் இரன்டு பட்டா வாகனத்தில் எனது வீட்டிற்கு வந்த 25 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் தாங்கள் பாதுகாப்பு தருவதாக கூறி இரவிரவாக பாதுகாப்பளித்தனர். இது சந்தோசமான விடயமாக இருந்தாலும் நான் இந்த மாவட்டத்திற்கு பெரியதாக எதுவும் செய்யாவிட்டாலும் கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியுள்ளதாக நினைத்தேன்.
இதற்குமப்hல் ஜனாதிபதியும் விவசாய அமைச்சராகவும் வன இலாகா அமைச்சராகவுள்ளவரும் அறையினுள் இரந்து பேசும் போது வெற்றுக்காணிகளை பாவிக்க வேண்டும் இளம் விவசாயிகளுக்கு அதனை கையளிக்கவேண்டும் காணிகளை பயன்படுத்தவேண்டும் என்கின்றனர். எனினும் இவை அந்த அறைக்குள் இருந்து கதைப்பதுடன் சரியாகிவிடுகின்றது.
இன்று வெற்றுக்காணிகளுக்குள் சென்று எங்கள் மக்கள் மரத்தையோ கத்தரி செடியையோ வைத்தால் வன இலாகா தங்களுடைய இடம் என்கின்றனர். அத்துடன் கைதும் செய்கின்றனர். இதனால் கெட்ட பெயர் வாங்குவது ஜனாதிபதியோ அமைச்சரோ இல்லை. ஏங்களிடமே நீங்கள் கேட்பீர்கள்.
ஆகவே வெகுவிரைவில் நான் எதிர்பார்க்கும் விடயம் வவுனியா மாவட்டத்தில் மிக விரைவாக வன இலாகாவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நிலை உருவாகும். மதுரா நகர் கிராமத்திலும் அவ்வாறான நிலையே உள்ளது. ஒரு முறை இரு முறை சொல்லி பார்க்கலாம். தொடர்ந்தும் ஈதேN நிலைதான் என்னறால் நானும் மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும்.
நாங்கள் வெற்றுக்காணிகள் தொடுர்பில் கதைக்கும் போது பாராளுமன்ற உறுப்பினருககு எதிராக எவ்வாறு வழக்கு போடலாம் என வழக்கறிஞர்களுடன் வன இலாகாவினர் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். ஆதைப்பற்றி எந்த பிரச்சனைகயும் இல்லை. நீங்கள் உங்கள் பிரதேசங்களில் வன இலாகாவுக்குரியதோ பிரசே செயலகத்திற்குரியதோ வெற்றுக்காணியாக இருந்தால் எனக்கோ எமது வட்டார செயலாளர்களுக்கோ அறிவியுங்கள். அதனை பிரதேச செயலாளர் ஊடாக உங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
இன்று அரசாங்கத்தின் சிந்தனை அற்ற செயற்பாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனதுக்குள் வெம்பிக்கொண்டிருந்தாலும் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையே கடந்த காலத்தில் காணப்படுகின்றது.
அமைச்சர்களின் வாகனங்கள் வவுனியாவை தாண்டியே யாழ்ப்பாணம் செல்லும் அவர்களை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் மட்டும்தான் வட மாகாணத்தில் உள்ள மாவட்டமாக கருதுகின்றனர்.
அண்மையில் வனவள அமைச்சர் யாழ்ப்பாணம் சென்று காட்டைப்பற்றி கதைக்கின்றார். காடில்லாத யாழ்ப்பாணத்தில் கட்டை பற்றி கதைக்கின்றார். காடு உள்ள வவுனியாவுக்கு செயலாளரை அனுப்புகின்றார் என தெரிவித்தார்.
No comments