வவுனியாவிற்கு தமிழக அரசின் 22,250 நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்தது!
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்கள் இன்று (02) காலை புகையிரதம் ஊடாக வவுனியாவை வந்தடைந்துள்ளது .
இவ் உதவிப் பொருட்கள் வசதியற்ற தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது .
இதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு 12015, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு 3560, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்கு 2000, வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு 4675 உணவுப் பொதிகள் வவுனியா மாவட்டத்திற்கு மொத்தமாக 22250 குடும்பங்களுக்கான பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ் உணவுப் பொதிகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக்கொண்டு குறித்த பிரதேச செயலாளர்கள் , கிராம அலுவலகர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் கையளித்திருந்தனர். (Vavuniyan)
No comments