விரைவில் அம்பலமாகவுள்ள பாரிய நிதி மோசடி : அதிரடியாக கைதாகவுள்ள மகிந்த குடும்பம்
பொது சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்திய மகிந்த குடும்பம் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (25) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறி்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் பணங்களை கொண்டு வர முடியும், அதற்குரிய ஆரம்பக்கால நாட்டினுடைய சட்ட நடைமுறைகளை மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.
தற்போது அநுரவிற்கு அதிக பெரும்பான்மை உள்ள காரணத்தினால் சட்டத்தினை உடனடியாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முடியும்.
அவ்வாறு சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்த பிறகு முறைப்படி அந்தந்த நாடுகளுக்கு உரிய வகையிலே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால் அந்த நடைமுறையானது எல்லோரும் நினைப்பது போல இலகுவான வேலை இல்லை அதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
இந்த துறையில் ஏனைய நாடுகளின் கருத்துக்களை ஆராய்ந்தவர்களில் கருத்துப்படி, கொள்ளையிடப்பட்ட செல்வங்களை மீள கொண்டு வரும் நடைமுறையானது சிக்கல் வாய்ந்ததும் செலவு கூடியதுமான ஒன்று.
இதை, தெரிந்துதான் அவ்வாறு கொண்டு சென்றவர்கள் முடிந்தால் எங்களை பிடியுங்கள் என தெரிவிக்கின்றனர், ஆனால் அது முடியாத காரியம் அல்ல.
தற்போது உள்ள அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ள நிலையில் இதற்கான இலகுவான வழி இவர்கள் அரசியலுக்கு வந்த அரம்பக்காலத்தில் ஒப்படைத்த அவர்களின் சொத்து மதிப்பையும் தற்போது அவர்களின் சொத்து மதிப்பையும் கணக்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் சொத்து மதிப்பிலான மாற்றத்தில் அவர்கள் அதை எவ்வாறு சம்பாரித்தார்கள் என கேள்வி எழுப்பினால் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இங்கிருந்தே நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த துணிச்சல் எந்த அரசாங்கத்திற்கு உள்ளது என்பதுதான் கேள்வி, இளநகையில் அனைத்து குற்றங்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு ஆனால் யார் அதை நடைமுறைப்படுத்துவது என்பதுதான் இங்கு கேள்வி.
ஆனால், நினைத்தால் சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தி அநுர குமார திஸாநாயக்கவினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments