Breaking News

வவுனியா இலுப்பைக்குளத்தில் மரம் நடுகை


வவுனியா ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கட்பட்ட இலுப்பைக்குளப்பகுதியிலே முந்நூறு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

கமத்தொழில், கால்நடை வளர்ப்பு அமைச்சின் கீழாக சிறிய அளவிலான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டத்தின் மூலமாக காலநிலைக்கு முகம்கொடுத்தல், அதன் ஊடாக மக்களை எவ்வாறு தயார்ப்படுத்தலும், வெப்பத்தினை கட்டுப்படுத்தலும், மழை வீழ்ச்சியை எவ்வாறு பெறுவதும் மற்றும் மண் அரிப்பை தடுப்பதற்காகவும் குறித்த திட்டத்தின் ஊடாக மரம் நடுகை செயற்திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் ஒரு கட்டமாக இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலே இலுப்பைக்குளப்பகுதியிலே மரநடுகை முன்னெடுக்கப்பட்டதுடன், இதனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் குறித்த திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்ரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர, தலைமைப்பீட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜேந்திரம், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. காஞ்சனா, விவசாயிகளர், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



No comments